அடுத்தவர்களின் உரிமையை அபகரித்தலே விடை

அடுத்தவர்களின் உரிமையை அபகரித்தலே விடை

சரித்திரத்தின் வெள்ளைத் தாளின்
அந்த மூலையில் கொலைகளின் இரத்த கரை
எடுப்பாய் உருத்தாலாய்
ஓரவஞ்சனை காய வடுக்களை ஆங்கங்கே விரவி
வார்த்து வார்த்து பூமி வரைபடைத்தை வரைந்திருந்தது

அமைதிகள் எப்போது அமைதியாய்..
தாலாட்டு பாடியது
பேராசைக்காரர்களின் இன்பவியலுக்கு
துன்பப்படும் துண்டு தாளும்… கசங்கி கசங்கி
அத்தனை அண்ட பேரோளிகளும் துன்பத்தை துயில்கொள்ளும்…

இவர்களின் கடவுள்களே பேராசையின்
உணவை உண்டுதான்
நோயாளியாய் வளர்ந்து
சக மனிதனின் மாமிசத்தை உண்டும்
உருவம் பெருத்து அவலமாய் அலங்கோலமாய் திரிக்கிறான் …

எந்த பறவையின் இறக்கையின் மீதும் மழைபெய்கிறது
எந்த பறவையும் தற்கொலை செய்யவும் இல்லை
தாவரங்களை துன்புறுத்தவுமில்லை
காலத்தை வளைக்கவுமில்லை
கனவை அறிவியலாக்கவுமில்லை பறவைகள் பறந்து திரியட்டும்
மனிதருக்காய் ஆப்பால் போய் வாழட்டும் வாழ்கிறது…

வைத்தியர்கள்
மருந்துக்களை கொடுத்து
பிரியும் உயிர்களை சித்ரவதை செய்கின்றனர்
மரணம் இயற்கையாய் இல்லை
செயற்கையாய் விற்கிறார்கள்…

இவர்களின் செயற்கை சேமிப்பின் மீது..
தீமையின் பாக்டிரியாக்கள் பூஞ்சைகள் போர் தொடுத்தும்
இன்னும் குளிர் பாதப்பெட்டியில் இதையத்தை அடைகாக்கின்றனர்

எல்லா கருவி பெட்டிக்குள்ளும் இவர்களின் உலகமிருக்கிறது
இனி பரிணாமத்தில்
கண்ணும், மூளை, மட்டும்தான் மனிதன் என்பான்
மற்ற அத்தனை உறுப்புகளும் அவனின் சுகபோக அறிவியல் செயலிக்க செய்யதொடங்கியது தெரியாமலே வாழ்ந்து முடிக்கும் இவன்…

எந்த எதர்த்தின் மீதும்
அடுத்தவர்களின் உரிமையை அபகரித்தலே விடை என்கின்றான்.

தனிமையின் மீது வக்கிரமும்
பொதுமையின் மீது கழிவிறக்கா காக்காய் கழிந்து விட்டும்
வளர்சிதை மாற்றத்தை முடிக்கிறது
வாழ்கை சுழற்சி ஒரு அயற்சியாக அத்தியாத்துடன் நிறைவுறும்..

ஏது மற்ற வெளியில் பறப்பபது கடிணம்…
எதுவும் புரிந்துவிடவில்லை…
புரிந்தது போலவே இருக்கிறது.

இப்போதெல்லாம் மூளையின் சிறையில்
அறிவு பெருக்கம் அங்காரத்தின் குறியீடாய்…
சூழ்ச்சியையும் சூதையும் வளர்க்கிறது…
மற்றதெல்லாம் கானல் நீர்தான்.

பாலசந்திரன்,
புதுக்கோட்டை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *