உண்மையில் நிகழ்ந்தவை !

உண்மையில் நிகழ்ந்தவை !

நதிகளும் நடந்திடும்!
காற்றுக்கும் வடிவம்
வந்துவிடும்!
வானின் உயரம்
குறைந்திடும் !
பனிரெண்டு ஆண்டுக்கு
ஒரு முறை
பூக்கும் குறிஞ்சி பூவும்
தினமும் பூத்திடும்!
கடலும் கரை
ஒதுங்கிவிடும் !
மீன்களும் கரைகளில்
ஏறி ஓய்வு எடுக்கும் !
வின்மீன்களும் எல்லாம்
பூமியில் பூக்களாய்
பூத்துவிடும்!
மானும் , புலியும்
நண்பர்களாகிவிடும் !
சூரியகாந்தியும் நீ
இருக்கும் திசை பக்கம்
திரும்பிவிடும் !
மேகங்களும் உன்மேல்
தழுவ ஆசைகொள்ளும்!
நீ நடந்து சென்றால்
மயில்களும் தன் நடனத்தை
நிறுத்திவிட்டும் !
நிலவும் மேகங்களுக்கு
பின் சென்று உறங்கிவிடும் !
சூரியனும் உன்பின்னே
சுற்றிவரும் !
காலங்களும்
மாறிவிடும்!
என்பதால் தான்
நீ மறைந்து கொண்டாயா ?

 

த. தீபக் ,
செய்தியாளர் ,மனசாட்சி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *