ஊட்டச்சத்து இல்லாத கிராமத்து மக்கள்…

ஊட்டச்சத்து இல்லாத கிராமத்து மக்கள்...

50 ஆண்டுகளுக்கு முன் கிராமத்து மக்கள் திடகத்தரமான உடலும் அதற்க்கு ஏற்ற உழைப்பும் கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.அதற்க்கு முக்கிய காரணம் அவர்கள் உட்கொண்ட உணவுப்பழக்க வழக்கங்கள் தான்.நெல் அரிசி சப்பாடுடே கிடைக்காது என்ற சூழலிலும் கம்ப கூலு,கேப்பை கூலு, சாமைக்கஞ்சி,குதிரைவள்ளி சோறு பேன்ற பல்வேறு சத்தான உணவுகளை உண்டு வாழ்ந்தார்கள்.

இந்த பழக்க வழக்கங்கள் காலப்போக்கில் மாற ஆரம்பித்துவிட்டது.காரணம்.?? அன்று அவர்கள் வீட்டில் உள்ள அனைவரும் உழைத்தாலே இரண்டு வேளை சாப்பாடு மட்டும் தான் கிடைக்கும்.ஆனால் இப்போது தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த திராவிட கட்சிகளின் இலவச அறிவிப்பால் இன்று இலவசமாக நியாயவிலை கடையில் அரிசி இலவசமாக போடப்படுகிறது.கிராமத்து மக்கள் இலவசமாக அரிசி போடுவாதல் அவர்கள் உழைக்கும் நேரமும்,அளவும் குறைந்தது.மேலும் அவர்களை இலவச அரிசியை உண்ண தொடங்கி விட்டார்கள்.

அந்த அரிசி விவசாயிகளிடமிருந்து அரசே நெல்லை நேரடியாக கொள்முதல் செய்து.அதை சேமிக்கிறோம் என்ற பெயரில் மழையில் ஊர வைத்து வெயிலில் காய வைத்து அது கெட்டுபோன பிறகு சத்துயில்லாத வெறும் அரிசியாக மட்டும் மக்களை சென்று அடைகிறது.

அந்த அரிசியை உண்ண தொடங்கிய கிராமத்து மக்கள் தன்னுடைய உடலில் இருந்த வலுவை இழக்க தொடங்கி விட்டார்கள்.அதனால் அவர்களின் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு உண்டாகிறது.இதனால் தற்போது பல கிராமங்களில் மக்கள் அனைவரும் உடல்நலம் குறைப்பாட்லும்,உடலில் ஆரோக்கியம் இல்லாதல் பல நோய்களை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.

இந்த பிரச்சனை தெரியாமல் மக்கள் அந்த அரிசியே தான் இன்னும் உண்ணுகிறார்கள்.

ஆரோக்கியம் இல்லாத அரிசியை அரசியலுக்காக பயன்படுத்து வருகிறார்கள்…

தோழர்,
ஆசிரியர் மனசாட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *