எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தானை நசுக்க வேண்டும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே கருத்து தெரிவித்துள்ளார்

எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தானை நசுக்க வேண்டும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே கருத்து தெரிவித்துள்ளார்

மும்பை,

பாகிஸ்தான் படையினர் சில நாட்களுக்கு முன் காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தான் படையினர் மரணமடைந்த இந்திய வீரர்களின் தலையை துண்டித்து, உடலை சிதைத்து வெறிச்செயலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தநிலையில் சிவசேனா தனது கட்சி பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் இதுகுறித்து கூறியிருப்பதாவது.

இந்தியாவில் நடக்கும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் ராணுவம், ஐ.எஸ்.ஐ. மற்றும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தான் காரணம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஒவ்வொரு முறையும் தாக்குதலுக்கு காரணம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள், ராணுவம் தான் காரணம் என நாம் அவர்களுக்கு ஆதாரங்களை அனுப்பி கொண்டு இருக்கிறோம். ஆனால் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் உற்பத்தி செய்யப்படுவதும், காஷ்மீரில் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதும் குறைந்தபாடில்லை.

காஷ்மீரில் வங்கிகள் கொள்ளையடிக்கப்படுகின்றன.ராணுவ வீரர்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால் இந்திய அரசு, பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு சம்மனை அனுப்பி வருகிறது. வெட்கக்கேடானது என்ற வார்த்தையை மட்டும் பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்துவது போதாது. அவர்களை நசுக்க வேண்டும்.ஒவ்வொரு இந்தியனின் உயிருக்கும் 50 பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் தலையை தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *