ஐ.நா சபையின் நடவடிக்கைகளை, உலகம் முழுவதும் நேரடியாகவும் தெளிவாகவும் புரிந்துகொள்வதற்கான மென்பொருள் கருவியினைக் கண்டுபிடிக்கும் சர்வதேச அளவிலான போட்டியில், இந்தியருக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரும், இளம் தொழிலதிபருமான அப்துல்காதர் ரஷீக் ஐ.நா-வின் சர்வதேச விருதினை வென்றுள்ளார். ஐ.நா சபை, தன்னுடைய சபை நடைமுறைகள், எடுக்கப்படும் தீர்மானங்கள், வாக்கெடுப்பு முறைகள் என அனைத்தையும் பார்வையாளர்கள் நேரடியாகப் பார்ப்பதற்கான மென்பொருள் கருவியினைக் கண்டுபிடிக்க, போட்டி ஒன்றை அறிவித்தது.
ஐ.நா-வின் இந்த சர்வதேச சவாலில், இந்தியர் அப்துல்காதர் ரஷீக் வென்றுள்ளார். இவருக்கான சர்வதேச அங்கீகாரம் விரைவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்துல்காதர் ரஷீக், இதற்கு முன்னர் ஐ.நா நடத்திய போட்டியிலும், மென்பொருள் கண்டுபிடிப்பு தொடர்பான பல சர்வதேசப் போட்டிகளிலும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.