ஐ.பி.எல் போட்டியின் முதல் சர்ச்சை இதுதான்

ஐ.பி.எல் போட்டியின் முதல் சர்ச்சை இதுதான்

மேற்கிந்திய வீரர் பொலார்டுக்கும் இந்திய வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. கொல்கத்தாவுடனான ஆட்டத்தில் போலார்டை மூளை இல்லாதவன் என சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியதாக எழுந்த சர்ச்சைக்கு பொலார்டு பதிலளித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் மேற்கிந்திய வீரர் பொல்லார்டு. நேற்று கொல்கத்தாவுடனான ஆட்டத்தில் களமிறங்கிய பொல்லார்டு தனது அதிரடி ஆட்டத்தை விடுத்து ஆமை வேகத்தில் விளையாடினார். 17 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்து அவர் ஆட்டமிழந்தார். இதையடுத்து வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் ,’பொலார்டு கடைசி ஓவரின் ஆட்டக்காரர். அவர் முன்பே களமிறங்கி ஆட்டமிழந்தது மூளை இல்லாத செயல்’ என விமர்சித்தார். எனினும் மும்பை இந்தியன்ஸ் ராணா, பாண்டியா உள்ளிட்டோரின் அதிரடி ஆட்டத்தால் வெற்றிபெற்றது.

இதையடுத்து, மஞ்சரேக்கரின் கருத்துக்கு பதிலளித்த பொல்லார்டு,’ வார்த்தைகளைப் பார்த்து உபயோகப்படுத்தவும், ஒருமுறை வார்த்தைகளை விட்டபின் திருப்பி எடுக்கமுடியாது’ என காட்டமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இளைஞர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தேடி தந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் போலார்டு கருத்துக்கு ஆதரவாக மேற்கிந்திய வீரர் டினோ பெஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார். ‘கறுப்பின மக்களை நீங்கள் குறைவாகவே மதிப்பிடுகின்றீர்கள்’ என கெவி6ன் பீட்டர்சனை குறிப்பிட்டு அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஐ.பி.எல் போட்டிகளில் சர்ச்சைகளும் சண்டைகளும் புதிதல்ல. எனினும் வர்ணனையாளருக்கும் வீரருக்கும் இடையே எழுந்த வாக்குவாதம் ஐ.பி.எல் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *