காஷ்மீர் பேச்சுவார்த்தை இரா.முத்தரசன் அறிக்கை

காஷ்மீர் பேச்சுவார்த்தை இரா.முத்தரசன் அறிக்கை

ஜம்மு காஷ்மீர் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் ஆலோசனை வரவேற்கத்தக்கது. அங்கு நிலமை மோசமாக உள்ளது.மக்கள் அந்நியமான மனநிலைக்கு வந்துள்ளனர்; அங்கு இரண்டு பாராளுமன்ற தொகுதிகளுக்கு நடந்த தேர்தலை மக்கள் புறகணித்துள்ளனர்;இதனால் ஏழு சத மக்களே வாக்கு அளித்துள்ளனர்.பள்ளி மாணவிகள் கல்வீச்சில் ஈடுபடுகின்றனர்.இதனை வெறும் சட்டம் ஒழுங்கு பிரசரசினையாக மட்டும் பார்க்க முடியாது.கள நிலமைகளை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கல்வீச்சில் ஈடுபடக்கூடாது என்ற உத்திரவாத்த்தை ஜம்மு- காஷ்மீர் பார்கவுன்சில் கொடுக்க வேண்டும் என்பது போன்ற உச்சநீதிமன்ற தலைமைநீதிபதியின் ஆலோசனைகள் நடைமுறையில் சாத்தியமற்றது. அங்கு நிலமை பிரிவினை கோருபவர்கள் உள்ளிட்ட யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை.பேச்சுவார்த்தை நடத்துவோம் என்ற பொதுவான வேண்டுகோள் சற்று பயன்தரலாம்.அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் மட்டும்தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்ற அரசின் நிலை சரியானது அல்ல.அரசானது பாகிஸ்தான் ஆதரவு சக்திகள் , பிரிவினைவாதிகள் மற்றும் அரசியலமைப்புச் சட்டம் 370 ஐ அமலாக்கம் செய்ய வேண்டும் என்று கோருவாரை இனங்கான வேண்டும். கல் எறிபவர்கள் அனைவரையும் தேசவிரோதிகள் என்று சொல்லுவது பயன்தராது.

அரசு நடைமுறை சாத்தியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அமைதி திரும்பவும் , காஷ்மீரை பாதுகாக்கவும் சம்மந்தப்பட்ட அனைவரோடும் பேச வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *