குணத்தின் வடிவம்

குணத்தின் வடிவம்

சிறுத்தை ஒன்று காட்டில் தனியாக வசித்து வந்தது.அது உணவு இல்லாமல் பலநாட்கள் பட்டினியாக இருந்தது. ஒருநாள் அது முழுநிலவு வெளிச்சத்தில் வேட்டைக்கு சென்றது.அப்போது ஒரு மான் தன் குட்டி உடன் உறங்கி கொண்டிருந்தது.அப்போது அமைதியாக சென்றது.மானின் அருகே சென்றபோது குட்டிமான் தன் அம்மவின்மீது தலை வைத்து உறங்கி கொண்டிருந்தது.அதை பார்த்த சிறுத்தை இந்த மானை வேட்டையாடினால் அந்தக்குட்டி அனாதை ஆகிவிடும் என்று நினைத்தது.பிறகு அங்கிருந்து அமைதியாக அங்கிருந்து சென்று விட்டது .அப்படியே மெதுவாக நடந்து சென்றது.ஒரு முயலை பார்த்து அதை பிடித்து விடவேண்டு என்று பதுங்கி அதன் அருகே சென்றது அந்தமுயல் தன் குழந்தைகளுக்காக உணவை எடுத்து கொண்டு சென்றது.இந்த சிறுத்தை அதை பார்த்து இந்த முயலை பிடித்து விட்டால் இதன் பிள்ளைகள் பட்டினியாக இருந்து விடும் என்று எண்ணி
அந்த முலையும் வேட்டையாடாமல் விட்டுவிட்டது.அந்த சிறுத்தை
நீர் அருந்துவதற்கு குளத்திற்கு சென்றது .அங்கு தண்ணீரை குடித்து கொண்டிருந்தது.அப்போது ஒருகுரங்கும் தண்ணீர் குடிக்க குளத்திற்கு வந்தது அதன் குட்டியை கிழே இறக்கிவிட்டு குரங்கு தண்ணீர் குடித்து கொண்டிருந்தது.அப்போது அங்கு மறைந்திருந்த முதலை அந்த தாய்க்குரங்கை பிடித்து கொன்றுவிட்டது.அந்தக்குட்டி குரங்கு கத்திக்கொண்டிருந்தது இதை பார்த்து கொண்டிருந்த சிறுத்தை அந்த குட்டிகுரங்கை தன் வாயால் கவ்விகொண்ண்டு தன்விட்ற்கு எடுத்து கொண்டு சென்று அது வளர்க்க ஆரம்பித்தது.இந்த சிறுத்தை மற்ற விலங்குகள் வேட்டையாடி உண்ட மீதியை உண்டு தன் உயிரை பாதுகாத்தது.இந்த சிறுத்தை இறந்த விலங்குகளை மட்டும் உண்ணபழகி கொண்டது .அந்த குரங்கு குட்டியை மற்ற வேட்டை விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பாக வளர்த்தது .சிறுத்தையின் நல்லகுணத்தால் எல்லாம்மே கிடைத்தது.எல்லா காட்டு விலங்குகளும்
இந்த சிறுத்தையிடம் அன்பாக பழகதொடங்கியது.பிறகு இந்த சிறுத்தை
மற்றும் குரங்கு குட்டியும் மகிழ்ச்சியாக வாழ்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *