சின்னத்திரையும்… பார்பனீய பண்பாட்டு மறுவுறுவாக்கமும்.

சின்னத்திரையும்...  பார்பனீய பண்பாட்டு மறுவுறுவாக்கமும்.

1.மொழியாக்க தொடர்களின் வாய் அசைப்பிற்கு ஏற்றார்போல் தவறாக புரிந்து கொள்ளுபடியான உரையாடல்களால் தமிழ் தற்கொலை செய்துகொள்ளும் அவலம்…
(என்னுடைய எழுத்து பிழைபோல்…)

2. ஒரே ஒரு சாதுவாண பெண் அவளை சுற்றி அத்தனை வில்லிகள் என பெண்களை எதிர் காத பாத்திரமாக பின்னும் திரைகதை யுக்தி..

3. பெண் காதபாத்திரங்கள் வஞ்சம், சூழ்சி, பொறமை, பழிதீர்க்கும் எண்ணம், என குரோத பண்பாடுகள் வளர்க்கும் உரையாடல்கள் சுவரஸியமாய் பின்னப்படும் திரைகதை வடிவங்கள்.

4. சமுகத்தின் எல்லா அவலங்களையும் ஏற்றுக் கொண்டு எந்த எதிர்ப்பும் காட்டாத பெண்தான் பெண்நிலை என ஆண் ஆதிக்க மனோபாவத்தை பார்வையர்களின் பொது புத்தியில் உரையவைக்கும் ஏற்பாடு சின்னத்திரை

5. நகர்புற மேட்டுகுடியினர்தான் வாழ்கைதான் பெரும்பாலும் கதைகளமாக இருக்கிறது. ஆனால் பெரும்பான்மை மக்கள் உழைப்பாளிகள். இதன் மூலம் மனிதர்களின் நிறம், உழைப்பு சாதி என்பதன் மீதான தவறான புரிதல் பொதுபுத்தியில் கட்டமைக்கபடுகிறது. ( எளிமையான மக்களின் வாழ்கை, உழைப்பு, வழிபாடு, திருமண விழா… இல்லை)

6. மாமியார்-மருமகள் போன்ற இப்படியான உறவுமுறைகளின் எதி்ர் நிலை உறவுகள்தான் மேலும் மேலும் பொதுபுத்தியில் கட்டமைக்கபடுகிறது.

7. அரசியல் விவாதங்கள், விவாதங்கில் பங்கேற்பவர்கள், நெரியாளர்கள், விளம்பரங்கள் இப்படி குழாய்யடி சந்தையாக மாறி கருத்து சுதந்திரத்தை மறுப்பதாக உள்ளது.

8. உடனடி செய்திகள் தவிர வழக்கமான செய்திகள் குறைந்துவிட்டன.

9. ”டாக் ஷோ” ”கேம் ஷோ” போன்ற இன் பிற நிகழ்வுகள் சிலரின் தனித்திறன் களை வெளி கொண்டு வருகின்ற. என்றாலும் அவை பார்பனிய காலசரத்தை பிரதிபலிப்பதாகவோ. திரைப்படங்களை பின்னனியாக கொண்டதாகவோ இருக்கிறது. எளிய மக்களின் நிகழ்வுகள் இல்லை என்றே சொல்லவேண்டும்.

10 பண்டிகை கால நிகழ்வுகள் திரையை மட்டும்மே பின்னனியாக கொண்ட நிகழ்வாக இருப்பது அவலமே. திரைகலைஞர்களின் ”பேட்டி”-மேடை நடகம் போல் போலி பண்பாட்டை வளர்க்கின்றனர்.

11. குழந்தைகளுக்கான நிகழ்வுகள் கூட பேதமையை போற்றும் பார்பனீயாத்தை கொண்டதாக இருக்கிறது. ஜனநாயக சிந்தனையை மறுப்பதாக உள்ளது. ஒருவர்தான் வீரர் மற்றவர் எல்லாம் போலி என்ற தனிமனித துதியை உளவியளாக பதிவு செய்கிறது. ஆனால் உலம் எல்லோராலும் உறுவாக்பட்டு எல்லோருக்குமானது.

13. கேம் ஷோக்களில் நடிகர் நடிகைகள் சிறு குழந்தைகளை விமர்சனம் என்ற பெயரில் திறமையை மிகை மதிப்பீடுவது அல்லது மீகை தாழ்த்துவது என்று அதிதம் காட்டுகின்றனர்.

14.” சொல்வதெல்லாம் உண்மை ” போன்ற நிகழ்வுகளில் சமுகத்தின் விதிவிலக்கான நிகழ்வுகளை சமுக விதி போன்று அம்பலபடுத்துவது சரியன்று

15. தமிழக ஊடகத்தை பொருத்தவரையில் அனைத்து சின்னதிரையும் ஒரு குறிப்பிட்ட அரசியல் பின்னனியாக கொண்டிருக்கிறது. இதுவே மா பெறும் அவலம்.

16. விதி விலக்காக ”டிஸ்கவரி” போன்ற சின்னத்திரைகள் பயனுள்ளதாக இருக்கிறது.

17. விளையாட்டுக்கான சின்னத்திரைகள் இளைஞர்களை பார்வையாளன வைத்திருக்கிறது. ஆனால் விளையாட்டு என் பங்கேற்பாளனக இருப்பதுதான் சரி. இளைஞர்களின் இளமையையும், ஆற்றலையும், காலத்தையும் விரையம் செய்வதாக மாறியிருக்கிறது.

18. சமுக சீரழிவுகளை மக்களுக்கு தெரிவிக்கும் எந்த நிகழ்வும் பெரியஅளவில் திட்டமிட்டே தவிர்க்கின்றனர் சின்னத்திரைகள்.

இப்படி மொத்த சமுகத்தையும் ஜனநாயக சிந்தனை முறைக்கு தயார்படுத்தாமல். மேலும் மேலும் தன்னப்போனிகளையும், பேதமை போற்றும் சீர்கேடுகளையும் உறுவாக்குவதகவே சின்னதிரை பெரும்பாலும் இருக்கிறது.

சின்னத்திரை = பார்பனீய நஞ்சு

பாலசந்திரன்,
எழுத்தாளர்,புதுக்கோட்டை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *