ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை போராட்டம் நடிகர் சிம்பு அறிவிப்பு.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை போராட்டம் நடிகர் சிம்பு அறிவிப்பு.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிலம்பரசன் மற்றும் அவருடைய தந்தையும் லட்சிய திமுக கட்சியின் தலைவருமான டி.ராஜேந்திரர் ஆகியோர் இன்று மாலை அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கலுக்கு வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றங்களின் உத்தரவால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு அனுமதிக்கோரி தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிம்பு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை (12-01-2016) மாலை 5 மணிக்கு தி. நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பாக கருப்பு சட்டை அணிந்து மௌன போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார். இந்த மௌன போராட்டம் 10 நிமிடங்கள் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறுகையில் தமிழர்களை கர்நாடகாவில் தாக்குகிறார்கள், தமிழ மீனவர்களை இலங்கையில் தாக்குகிறார்கள், தமிழன் என்றால் இந்தியாவில் எங்கும் மதிப்பதில்லை என்றும் ஆவேசமாக கூறினார். ஆனால் ஜல்லிக்கட்டு விசயத்தில் இனிமேலும் அமைதியாக இருக்காமல் தமிழர்கள் அனைவரும் கட்சி வித்தியாசம் இல்லாமல் ஒற்றுமையுடன் போராட வேண்டும் என அவர் தமிழக மக்களை கேட்டுக்கொண்டார்.

மேலும் நாளை மாலை 5 மணிக்கு தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் மற்றும் இளைஞர்கள் அவரவர்களின் வீடுகளின் முன்போ அல்லது அலுவலகலங்களின் முன்போ கருப்பு சட்டை அணிந்து மௌனமான போரடவும் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிம்பு செய்தியாளர்களை சந்தித்த பின், அவருடைய தந்தை டி. ராஜேந்திரர் செய்தியாளர்களை சந்தித்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிம்பு பேசியது போல அனைவரும் ஆதரவு தரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *