‘ஜஸ்ட் மிஸ்’ டிரம்ப் கையெழுத்திட்ட உத்தரவில் இந்திய ஐடி நிறுவனங்கள் தப்பித்தது

'ஜஸ்ட் மிஸ்' டிரம்ப் கையெழுத்திட்ட உத்தரவில் இந்திய ஐடி நிறுவனங்கள் தப்பித்தது

இன்னும் கொஞ்ச நாளுக்கு ஐடி நிறுவனங்கள் நிம்மதியாக இருக்கலாம். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்ட பை அமெரிக்கன் மற்றும் ஹையர் அமெரிக்கன் நிர்வாகச் சீர்திருத்த உத்தரவில், இந்நாட்டில் டெக்னாலஜி ஊழியர்களுக்கு அளிக்கப்படும் விசா கட்டுப்பாடுகள் குறித்த எவ்விதமான அறிவிப்புகளும் உத்தரவுகளும் இல்லை.
அமெரிக்க அரசு ஏற்கனவே அறிவித்ததைப் போலவே இன்னும் சில மாதங்களுக்குத் தற்போது இருக்கும் விதிமுறைகள் தொடரும் என்பதும் உறுதியானது. இதனால் இன்னும் சில நாட்களும் இந்திய ஐடி நிறுவனங்கள் ஜாலியாக இருக்கலாம்.
அப்ப இந்த எனவே பை அமெரிக்கன் மற்றும் ஹையர் அமெரிக்கன் அறிவிப்பில் அப்படி என்ன தான் இருக்கிறது
டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம் பதவியேற்றிய நாள் முதல் தொடர்ந்து வெளிநாட்டு ஊழியர்கள் பணியாற்றி வரும் பணியிடங்களில் அமெரிக்கக் குடிமக்களை அமர்த்த வேண்டும் எனக் கருத்தை முன்வைத்து வந்தார். இது மக்கள் மத்தியிலும் நிறுவனங்கள் மத்தியிலும் கடுமையான எதிர்ப்பு நிலவிய நிலையிலும் அதற்கான பணிகளைத் தொடர்ந்து செய்து வந்தார் டிரம்ப். இந்நிலையில் எதிர்ப்புகளைத் தாண்டி நேற்று டொனால்டு டிரம் பை அமெரிக்கன் மற்றும் ஹையர் அமெரிக்கன் நிர்வாகச் சீர்திருத்த உத்தரவில் கையெழுத்திட்டார். நிர்வாகச் சீர்திருத்த உத்தரவு இந்த உத்தரவில் அமெரிக்காவின் செக்ரட்டரி ஆஃப் ஸ்டேட், அட்டார்னி ஜென்ரல், செக்ரட்டரி ஆஃப் லேபர் மற்றும் செக்ரட்டரி ஆஃப் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி ஆகிய துறைகளை இனி எச்-1பி விசா அனைத்தும் திறமைவாய்ந்தவர்கள், அதிகச் சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே சென்றடையும் வகையில் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என இத்துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளார் அதிபர் டொனால்டு டிரம்ப். இந்திய ஐடி நிறுவனங்கள் உலகளவில் ஐடி சேவையைச் சிறப்பான முறையில் அளித்து வரும் 150 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய ஐடி சந்தைக்கு மிகமுக்கியமான வர்த்தகத் தளம் அமெரிக்கா. அமெரிக்கா சந்தை வர்த்தகத்தில் குறைவான செலவீட்டில் அதிக லாபத்தை அடைய வேண்டும் என்னும் நோக்கில் இந்திய ஐடி நிறுவனங்கள் இந்திய பொறியாளர்களை அமெரிக்காவிற்கு எச்-1பி விசா வாயிலாக அனுப்பி அதிகளவிலான லாபத்தைப் பெற்று வந்தது. தற்போது டிரம்ப்-இன் இப்புதிய கட்டுப்பாடுகளால் இந்திய ஐடி நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் லாபத்தை இழக்க உள்ளது. எச்-1பி விசா 2018 மேலும் டிரம்ப் கையெழுத்திட்ட நிர்வாகச் சீர்திருத்த ஒப்பந்தம் மூலம் எச்-1பி விசா 2018 லாட்டரியில் எவ்விதமான பாதிப்பும் இருக்காது. ஆனால் விசா விதிமுறை மாற்றங்கள் கூடிய விரைவில் அமலாக்கம் செய்யப்படும் என நாஸ்காம் உறுதி செய்துள்ளது. நாஸ்காம் என்பது இந்திய ஐடி நிறுவனங்கள் தலைமை அமைப்பு. மசோதா இதுவரை டொனால்டு டிரம் பதிவியேற்றிய பின் அமெரிக்காவில் எச்-1பி விசா குறித்து 4 மசோதாக்களும், அவுட்சோர்சிங் குறித்து 6 மசோதாக்களும், குடியுரிமை குறித்து 3 மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முக்கியமான மசோதா இதில் ஐடி நிறுவனங்களையும் ஊழியர்களையும் நேரடியாகப் பாதிக்கப்படும் அளவிற்கும் மிக முக்கியமான மசோதாவாகப் பார்க்கப்படுவது ஊழியர்களின் அடிப்படையைச் சம்பளம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மசோதாவில் எச்-1பி விசா பெறும் ஒருவரின் அடிப்படை சம்பளம் அமெரிக்க ஊழியர்களின் சராசரி சம்பளத்துடன் ஒத்துப்போக வேண்டும். இதன் படி எச்1பி விசா பெறும் நபர் குறைந்தபட்சம் 1,30,000 அமெரிக்க டாலரைச் சம்பளமாகப் பெற வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்டது. 4 நாட்கள் ஒவ்வொரு வருடமும் அமெரிக்க அரசு பொதுப் பிரிவில் 65,000 எச்-1பி விசாக்களும், அமெரிக்கக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு எனத் தனிப்பிரிவின் கீழ் 20,000 விசாக்களும் அளிக்கப்படும். இதன் படி 2018ஆம் எச்1பி விசாக்கான ஆர்வம் மக்கள் மத்தியில் குறைந்தாலும், 4 நாட்களில் இதற்கான விண்ணப்பங்கள் முழுமை அடைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்திய ஐடி நிறுவனங்கள் இந்திய ஐடி நிறுவனங்கள் இந்த விசாவை முறைகேடாகப் பயன்படுத்தி வருகிறது என்பதற்காகவே அமெரிக்க அரசு இத்தகை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதற்கு இந்திய ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. ராஜேஷ் கோபிநாத் இதுகுறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் சீஇஓ ராஜேஷ் கோபிநாத் கூறுகையில், விசாவை மையமாக வைத்து இயங்கி வரும் எங்களது வர்த்தகத்தைத் தொடர்ந்து குறைத்து வருகிறோம். மேலும் விசாவை மட்டும் நம்பி இயங்கும் வர்த்தக முறையில் இருந்து மாறும் பணிகளைச் செய்து வருகிறோம் எனத் தெரிவித்தார். இன்போசிஸ் இந்தியாவின் 2வது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்போசிஸ் விசா பிரச்சனைகளைத் துவங்கிய நாளில் இருந்து அதிகளவில் அமெரிக்கக் குடிமக்களைத் தனது அமெரிக்க அலுவலகங்களில் பணியில் அமர்த்தி வருகிறது. வருவாய் மற்றும் லாபம் விசா பிரச்சனைகளில் இருந்து வெளிவர இந்திய ஐடி நிறுவனங்கள் அனைத்தும் தற்போது அமெரிக்க மக்களையும் அமெரிக்கக் கல்லூரிகளில் இருந்து வெளிவரும் மாணவர்களைப் பணியில் அமர்த்தும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இதனால் இந்திய ஐடி நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களைக் காத்துக்கொண்டாலும், லாபத்தை இழக்கும். இதுவே உண்மையான நிலை. இந்தியாவில் என்ன நடக்கும் அமெரிக்காவில் இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகளவில் ஊழியர்களுக்காகச் சம்பளம், பயிற்சி, அலுவலகம், எனப் பலவற்றில் அதிகச் செலவு செய்யும் காரணத்தால் இந்தியாவில் அதிகளவிலான செலவின குறைப்பை அமலாக்கம் செய்யும். இதனால் பல ஊழியர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை உருவாகும். பிற நாடுகள் அமெரிக்காவைத் தொடர்ந்து, புதிய விசா கட்டுப்பாடுகளைச் சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா அறிவித்துள்ள நிலையில் கூடிய விரைவில் பிரிட்டனும் அறிவிக்க உள்ளது. இந்திய அரசு விசா கட்டுப்பாடுகள் குறித்து நாஸ்காம் மற்றும் மத்திய அரசு தொடர்ந்து அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *