‘டங்கல்’ திரைப்படம் மிகப்பரவலாக வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்து வருவது பற்றிய உற்சாகமளிக்கும் செய்தியைப் படித்துவிட்டு அடுத்த செய்திக்கு வந்தால், மனம் அப்படியே வேதனையில் மூழ்குகிறது.

‘டங்கல்’ திரைப்படம் மிகப்பரவலாக வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்து வருவது பற்றிய உற்சாகமளிக்கும் செய்தியைப் படித்துவிட்டு அடுத்த செய்திக்கு வந்தால், மனம் அப்படியே வேதனையில் மூழ்குகிறது.

‘டங்கல்’ திரைப்படம் மிகப்பரவலாக வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்து வருவது பற்றிய உற்சாகமளிக்கும் செய்தியைப் படித்துவிட்டு அடுத்த செய்திக்கு வந்தால், மனம் அப்படியே வேதனையில் மூழ்குகிறது.

அந்தப் படத்தில் சிறுவயது கீதா பொகாட்டாக நடித்த ஜாய்ரா வாசிம் வலைத்தளங்களில் மிக மோசமான வசவுகளுக்கு உள்ளாகியிருக்கிறார். திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கியதற்காக மட்டுமல்ல, ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தியைச் சந்தித்ததற்காகவும். ஜாய்ரா வாசிம் குடும்பத்திற்கு மெஹ்பூபா பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்.

ஒரு இஸ்லாமியப் பெண் இப்படியெல்லாம் செய்யலாமா என்பதுதான அந்த முகநூல், ட்விட்டர் வசவுகளின் சாரம். நேற்று திடீரென தனது செயல்களுக்கு மன்னிப்புக் கோரி ஒரு பதிவேற்றம் செய்தார். தனக்கு 16 வயதுதான் ஆகிறது என்பதால், தான் அறியாமல் செய்துவிட்டதைப் புரிந்துகொண்டு பொறுத்தருளுமாறும் அவர் அதில் கேட்டுக்கொண்டார். பின்னர் அந்த மன்னிப்புக் கடித்தத்தை நீக்கிய அவர், தன்னை யாரும் நிர்ப்பந்திக்கவில்லை என்ற ஒரு விளக்கத்தைப் பதிவேற்றம் செய்தார். பின்னர் அதையும் நீக்கிவிட்டார். ஜாய்ரா வாசிமுககு ஆதரவாகவும் பலர் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர் என்பது ஆறுதலான தகவல்தான்.

காஷ்மீரில் முன்பு மூன்று பள்ளிச் சிறுமிகள் இசைக்குழு தொடங்கியதற்காக அச்சுறுத்தப்பட்டார்கள், பிறகு அந்த இசைக்குழுவைக் கலைக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள்.

மதத்தின் மேன்மைகளை எடுத்துரைத்துப் பின்பற்றச் செய்யலாம். வாதங்களுக்கு மாற்று வாதங்களை முன்வைத்து மத வழியின் நியாயங்களை நிலைநிறுத்தலாம். அதையெல்லாம் செய்வதற்கு மாறாக, வசைமாரி பொழிவது, மிரட்டுவது, ஒடுக்குவது போன்ற வழிகளைக் கடைப்பிடித்து மதத்தைக் காப்பாற்ற முயல்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள். தங்களுடைய மதத்தின் மாண்புகளைத் தங்களின் இம்மாதிரியான செயல்கள்தான் கீழிறக்குகின்றன என்பதை அவர்கள் புரிந்துகொண்டாக வேண்டும். அவர்களுடன் உடன்படாத, ஜனநாயக எண்ணம் கொண்டோர், எல்லா மதங்களிலும் பல மடங்கு இருக்கிறார்கள். ஆனால் மவுனமாக இருக்கிறார்கள். இந்தப் பிரச்சனையில் இஸ்லாம் சமுதாயத்தைச் சேர்ந்த அத்தகு சரியான சிந்தனையாளர்கள், இத்தகு வசை வழிமுறைகளை எதிர்த்து வெளிப்படையாகப் பேச வேண்டும். இதுபோன்ற பிரச்சனைகள் மற்ற மதங்களின் பெயரால் வருகிறபோது அந்த மதங்களைச் சார்ந்தவர்களும் மானுட உரிமைகளுக்காக வாதாட வர வேண்டும்.

‘டங்கல்’ படத்தின் மூலம் அமீர்கான் நிலைநாட்டியிருக்கிற முக்கிய வெற்றியே, அது கனவுக்கன்னியரை உருவாக்கவில்லை, மாறாகப் பெரும்பான்மையான பெண்களின் சாதனைக் கனவுக்கு உருவம் கொடுத்திருக்கிறது என்பதுதான். அதிலே பங்களித்துள்ள ஒரு சிறுமிக்கு ஏற்படுத்தப்படும் மன உளைச்சல், மதப்புனிதத்தைக் காப்பதற்காகவா், அல்லது ஒட்டுமொத்தமாகப் பெண்கள் தங்கள் விலங்குகளை உடைக்க ஒருபோதும் அனுமதிக்கூடாது என்ற அடிமைத்தனத்தைத் தக்கவைப்பதற்காகவா?

குமரேசன்,
தீக்கதிர் ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *