டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் படித்து வந்த திருப்பூர் மாணவர் சரத்பாபு மர்மமான முறையில் இறந்து கிடந்தது பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது.

அவர் எப்படி இறந்தார்?
ஏன் இறந்தார்?
என்பது பற்றி உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

தலைநகர் டெல்லியில் படிப்பும், பாதுகாப்பும் சிறப்பாக இருக்கும் என்று கருதிதான் வெளிமாநில மாணவர்கள் அங்கு சென்று படிக்கிறார்கள்.

ஏற்கனவே திருப்பூர் மாணவர் சரவணன் இறந்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

இதற்குள் இது 2-வது சம்பவம். தமிழக மாணவர்களுக்கு டெல்லியில் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பை மத்திய அரசும், டெல்லி அரசும் உறுதி
செய்யவேண்டும்.

”தமிழகத்தில் #கைத்தறி #நெசவாளர்கள் தாங்கள் தயாரிக்கும் பட்டுத்துணிக்கான பட்டு நூலின் விலை உயர்ந்திருந்தும், பட்டுத்துணிகளின் விலை உயராமல் நஷ்டம் அடைவதை சுட்டிக்காட்டி பட்டு நூலின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று முதல் அவர்கள் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளனர்.

இவர்களின் #வேலை_நிறுத்தத்தால் #பட்டு_உற்பத்தி #பாதிக்கப்படுவதோடு, தொழிலாளர்களும் வேலையின்றி, வருவாய் இழந்து கஷ்டப்படுவார்கள்.

எனவே மத்திய அரசு பட்டு உற்பத்திக்கு தேவைப்படும் நூலின் விலையைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக தமிழக அரசு உடனடியாக மத்திய அரசுடன் பேசி பட்டு நூல் விலையைக் குறைத்தால்தான் தமிழகத்தில் பட்டு வகை துணிகளை தயாரிக்க ஏதுவாக இருக்கும் என்பதை உறுதிப்பட தெரிவிக்க வேண்டும்”

ஜி.கே.வாசன்
தலைவர்,தமிழ்மாநில காங்கிரஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *