தமிழகத்தில் இனி இடைத்தேர்தல் அல்ல, பொதுத்தேர்தல் தான் வரப்போகிறது – திமுக செயல் தலைவர் ஸ்டாலின்

தமிழகத்தில் இனி இடைத்தேர்தல் அல்ல, பொதுத்தேர்தல் தான் வரப்போகிறது – திமுக செயல் தலைவர் ஸ்டாலின்

சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற திமுக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளான வருகின்ற ஜூன் 3-ம் தேதி அரசியல் வைரவிழா நடைபெறவுள்ளதாக கூறினார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக தான் வெற்றி பெறும் என உளவுத்துறை மூலம் தெரிந்ததால் ஏதேதோ காரணங்கள் கூறி இடைத்தேர்தலை நிறுத்திவிட்டார்கள். மக்கள் ஒரே ஒரு வாக்களித்து மூன்று முதல்வர்களை பார்த்துவிட்டார்கள் என்றார். தமிழகத்தில் இனி இடைத்தேர்தல் அல்ல, பொதுத்தேர்தல் தான் வரப்போகிறது என்றும், தொண்டர்கள் தயாராக இருக்குமாறு ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்

தமிழக சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீசெல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் பிளவுபட்டுள்ள இரு அணிகளும் இணைந்து விடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இதற்காக இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைக்கு குழுக்கள் அமைக்கப்பட்டன. இருப்பினும் இரு அணியினரும் மாறுபட்ட கருத்துக்களை கூறி வருவதால் இணைப்பு பேச்சுவார்த்தைவில் தொடர் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு, தனது ஆதரவாளர்களை சந்திக்க திட்டமிட்டு பயணத்தை தொடங்கியுள்ளார். அதன் முதல்கட்டமாக சென்னை ஓ.எம்.ஆர் சாலை ஒய்.எம்.சி மைதானத்தில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீசெல்வம், சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.தமிழக சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீசெல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று ஓ.பன்னீசெல்வம் கூறியது எடப்பாடி பழனிச்சாமிக்கு விடுத்த சவால் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட சூழ்நிலையில், தேர்தல் நடத்துவது தங்களுக்கு சாதகமாக இருக்காது என்ற காரணத்தால் ஆளும் கட்சியினர் உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடுவதாக கூறினார். உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் எந்த தேர்தல் முதலில் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று ஓ.பன்னீசெல்வம் கூறியது எடப்பாடி பழனிச்சாமிக்கு விடுத்த சவால் என அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *