தமிழகத்தில் 12 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் பணி 2020ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் – அமைச்சர் வேலுமணி

தமிழகத்தில் 12 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் பணி 2020ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் - அமைச்சர் வேலுமணி

தமிழகத்தில் 12 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் பணி 2020ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கோவை உள்ளிட்ட 12 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. தலைமை செயலகத்தில் அமைச்சர் வேலுமணி முன்னிலையில் ஜெர்மனி நாட்டை சேர்ந்த நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வேலுமணி, 12 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் பணி 2020ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என நம்பிக்கை தெரிவித்தார். மத்திய அரசு 50 சதவீதமும் மாநில அரசு 50 சதவீதமும் ஸ்மார்ட் திட்ட பணிகள் முதலீடு செய்வதாக அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *