தமிழகத்தை வஞ்சிக்கும் திராவிட கட்சிகள்..

தமிழகத்தை வஞ்சிக்கும் திராவிட கட்சிகள்..

தமிழகத்தை காங்கிரஸ் தலைமையில் காமராஜர் ஆட்சி செய்தது தான் கடைசி அதன் ஐம்பது ஆண்டுகளாக திமுக வும்,அஇஅதிமுக வும் தான் மாறி மாறி திராவிடம் தான் ஆட்சி என்ற பெயரில் அடிமைப்படுத்தி கொண்டு இருக்கிறது.

காமராஜர் ஆட்சி காலத்தில் தான் தமிழகத்தில் வைகை பேன்ற பல்வேறு அணைகள் கட்டப்பட்டது.அதன் பின் இன்று வரை எந்த அணையும் புதியாதாக எதுவும் கட்டப்படவில்லை அதற்க்கான முயற்சியும் எடுக்கவேயில்லை.

மேலும் காவிரி,முல்லை பெரியாறு மற்றும் பாலாறு பேன்ற தமிழகத்தின் வாழ்வாதார ஆறுகளில் நமக்கு இருந்த உரிமைகளை இழந்துள்ளோம்.

காரணம் யார் தெரியுமா.??

நாம் தான் திராவிட கட்சிகளை நம்பி அவர்களை ஆதரித்தால் வந்த விளைவு தான் இது.இரண்டு கட்சிக்கு ஆதரவு இல்லாமால் இருந்த ஒரு சில இடங்களை சாதி,மத கட்சிகளை உருவாக்கி அவர்களுக்குள் கலவரத்தை தூண்டிவிட்டு அவர்களையும் தன்வசப்படுத்தி வைத்துள்ளது.அவர்களின் சூழ்ச்சியை அறியாத மக்கள் இன்னும் சாதியையும், மதத்தையும் நம்பி இருக்கிறார்கள்.

நாம் நீருக்காக அண்டை மாநிலங்களை நாம் நம்பி இருக்கவேண்டிய அவசியம் இல்லை.நாம் மாநிலத்தில் உள்ள ஆறுகளையும், கம்மாய்களையும், குளங்களையும்,குட்டங்களையும் மற்றும் ஊரணிகளையும் தூர்வாரி மழைக்காலங்களில் கிடைக்கும் மழைநீரை சேமித்தாலே போதும் நம்முடைய நீர் தேவையை பூர்த்தி செய்துவிடலாம் என்று ஆய்வரிக்கைகள் தெளிவுபடுத்துகிறது.

ஆனால் அதை இந்த திராவிடக்கட்சிகள் செய்வதில்லை செய்வதற்க்காக நிதிகளை அரசு ஒதுக்கீடு செய்யும் ஆனால் அந்த திட்டங்களுக்கு முழுமையாக போய் சேராது.மேலும் நீர்நிலைகளில் மணல் அள்ளும் மாபெரும் பகல் கொள்ளையும் அரசே செய்துவருகிறது.

இதையொல்லாம் நிறுத்தி நீர்நிலைகளை பாதுகாத்து தமிழகத்தில் உள்ள ஆறுகளை மட்டும் இணைத்தால் போதும் தமிழகம் செழிக்கும்.

புதிய அணைகள் கட்டி கடலில் கலக்கும் நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.மழைநீரின் முக்கியத்துவத்தை மக்களுக்கும் இன்றைய இளைய சமுதாயத்திற்க்கு உணர்த்தினால் போதும் தமிழகம் விவசாயத்தில் வளர்ச்சி அடையும்.குடிநீர் தேவையும் பூர்த்தி செய்துவிடலாம்.

தோழர்,
ஆசிரியர் மனசாட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *