தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழ தலைவர் பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தில் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழ தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரியின் நடுவர் நீதிமன்ற இறுதி தீர்ப்பை முடக்கும் வகையில் புதியசட்டமுன் முடிவை மத்திய அமைச்சர் உமாபாரதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

இந்த சட்ட முன்வடிவால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதிலும், காவிரி நீரை பெறுவதிலும் மிகப்பெரிய தடையை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள பி.ஆர்.பாண்டியன் உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தில் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் எனவும் குறிப்பிட்டார்.

இதனிடையே தமிழக அரசின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தஞ்சை ரெயில் நிலையம் முன்பு தமிழக முதல்அமைச்சர் பழனிசாமியின் உருவபொம்மையை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *