தமிழக சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீசெல்வம் தெரிவிப்பு

தமிழக சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீசெல்வம் தெரிவிப்பு

தமிழக சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீசெல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் பிளவுபட்டுள்ள இரு அணிகளும் இணைந்து விடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இதற்காக இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைக்கு குழுக்கள் அமைக்கப்பட்டன. இருப்பினும் இரு அணியினரும் மாறுபட்ட கருத்துக்களை கூறி வருவதால் இணைப்பு பேச்சுவார்த்தைவில் தொடர் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு, தனது ஆதரவாளர்களை சந்திக்க திட்டமிட்டு பயணத்தை தொடங்கியுள்ளார். அதன் முதல்கட்டமாக சென்னை ஓ.எம்.ஆர் சாலை ஒய்.எம்.சி மைதானத்தில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீசெல்வம், சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

எண்ணூர் துறைமுகத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ள பகுதியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சென்னை எண்ணூர் கடலில் எண்ணெய் கசிந்த பகுதியை பார்வையிட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெயை அகற்றும் பணியில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. 5700 பேர் கொண்ட 25 குழுக்கள் எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலில் கொட்டிய எண்ணெய் ஓரிரு நாளில் முழுமையாக அகற்றப்படும் என கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட இடங்களில் பிடிக்கப்பட்ட மீன்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. மீன்களில் எந்த வித நச்சுப்பொருட்களும் கலக்கவில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது. மீனவர்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து பரிசீலிக்கப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும். எண்ணெய் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.

அதிமுகவின் இரு அணிகளும் இணைவது தொடர்பில் ஓ.பன்னீசெல்வம் தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக அம்மா அணியிலிருந்து டிடிவி தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் முற்றாக ஒதுக்கப்பட்ட நிலையில், இரு அணிகளும் இணையும் என கருதப்பட்டது.

இந்நிலையில், ஓ.பன்னீசெல்வம் தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு இன்று அமைக்கப்பட்டது. இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னரே அவர்கள் இணைவது தொடர்பில் அறிவிக்கப்படுமென தெரிகிறது. எனினும் ஓ.பி.எஸ் தரப்பில் சசிகலாவையும் கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருவதால் குழப்பம் நீடிக்கிறது.அதிமுகவின் இரு அணிகளும் இணைவது தொடர்பில் ஓ.பன்னீசெல்வம் தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *