தமிழ்நாட்டில் காவிகள் காலூன்றுகிறதா.?

தமிழ்நாட்டில் காவிகள் காலூன்றுகிறதா.?

பாஜக எவ்வளவோ முயன்றும் தமிழகத்தில் காலுன்ற முடியவில்லை. ஆனால் தமிழகத்தில் சதுரங்க ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது பாஜகவும் RSS ம் தமிழகத்தில் உள்ள சிறிய சாதிய கட்சிகளையும், மாதவாத கட்சிகளையும் தன்னுடன் இணைத்து அவர்கள் மூலம் காய்களை நகர்த்தி வருகிறது.

பாஜக நேரடியாக செய்ய முடியாத ஒன்றை தன்னை சார்ந்துள்ள சிறிய சாதிய மதவாத கட்சிகளால் அதை செய்துமுடிக்கிறது.

வடமாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ள பாஜக, இடதுசாரிகள் வலுவாக உள்ள கேரளத்தில் இதுவரை நடக்காத ஒன்று பாலக்காடு நகராட்சியை பாஜக கைப்பற்றிவிட்டது. ஆனால் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் ஒரு பாரளுமன்றத்தை தொகுதியில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது அதுவும் கூட்டணியால் மட்டுமே என்பது அவர்களுக்கும் தெரியும்.

தமிழகத்தை எப்படியாவது, எதையாவது செய்து ஆட்சியை கைப்பற்ற துடிக்கிறது பாஜக. அதை நாம் அறியாமல் இடதுசாரிகள், திராவிடர்கள் மற்றும் தமிழ் தேசியவாதிகள் என்று பிரிக்கப்பட்டு இருக்கிறோம்.

நாம் அரசியலில் ஒன்றுபடவில்லை என்றாலும் “காவிப்படைகளை” எதிர்கொள்வதில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். நாம் ஒன்றுபடவில்லை என்றால் தமிழகத்தை காவிகள் கைப்பற்றி தமிழகத்தை சாதியலும், மதவாதத்தாலும் பிரிக்கப்பட்டு தமிழகம் எங்கும் காவி மையமாக காட்சியளிக்கும்.

“ஒன்றுபடுவோம்”
“காவிகளை வென்று எடுப்போம்”

தோழர்,
ஆசிரியர், மனசாட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *