திரைப்படத்தில் நெருக்கமான காட்சிகளில் நடிப்பது தவறில்லை – பிரியங்கா சோப்ரா

திரைப்படத்தில் நெருக்கமான காட்சிகளில் நடிப்பது தவறில்லை - பிரியங்கா சோப்ரா

திரைப்படத்தில் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதில் தவறில்லை என பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

2000வது ஆண்டு மிஸ் வேர்ல்டு பட்டம் பெற்றதன் மூலம் கவனம் பெற்ற பிரியங்கா சோப்ரா, 2002ல் விஜய்யின் தமிழன் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

தொடர்ந்து பல்வேறு படங்களில் நாயகியாக நடித்ததுடன், தயாரிப்பு பணிகளிலும் கவனம் செலுத்தி வந்தார். will i am உடன் In My City மற்றும் Pitbull உடன் Exotic உள்ளிட்ட பாடல்களில் நடித்ததன் மூலம் சர்வதேச கவனத்தையும் பிரியங்கா சோப்ரா ஈர்த்தார்.

இதனிடையே, ஹாலிவுட் படங்களில் கால்பதித்துள்ள பிரியாங்கா சோப்ரா, திரைப்படங்களில் நெருக்கமான காட்சிகளில் நடிப்பது தவறில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் இந்திய படங்களில் என்னுடைய பாய் பிரண்டாக வருபவர் இந்தியர், ஹாலிவுட் படத்தில் வருபவர் வெள்ளைக்காரர் மற்றபடி எந்த வித்தியாசமும் இதில் இல்லை என்றும் பிரியாங்கா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *