தீவிரவாத தாக்குதல்களுக்கு ஒரு முடிவு ஏற்பட்டே ஆக வேண்டும் – சேவாக் கருத்து

தீவிரவாத தாக்குதல்களுக்கு ஒரு முடிவு ஏற்பட்டே ஆக வேண்டும் - சேவாக் கருத்து

காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் இன்று அதிகாலை நடந்த தீவிரவாத தாக்குதலில் இந்திய வீரர்கள் மரணமடைந்ததற்கு இந்தியக் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள இந்திய ராணுவ முகாம் மீது, தீவிரவாதிகள் இன்று அதிகாலை துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மூன்று ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். மேலும் ஐந்து வீரர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்து கிரிக்கெட் வீரர் சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் நாம் தூங்கிக்கொண்டிருக்கும் வேளையில் மூன்று பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். மூன்று குடும்பங்களின் கனவு தகர்க்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு முடிவு ஏற்பட்டே ஆக வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இம்மாதிரியாக சேவாக் தனது கருத்துகளை ட்விட்டரில் தெரிவிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் இந்திய ராணுவம் மற்றும் மக்கள் மீது தாக்குதல்கள் நடைபெறும்போது தனது கோபத்தையும் சில நேரங்களில் தனது வருத்தங்களையும் சேவாக் ட்விட்டரில் பதிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *