தூய்மை இந்தியா திட்டத்தில் நடைபெறும் மும்பை கண்காட்சியில் வேலூர் மாநகராட்சி பங்கேற்பு-

தூய்மை இந்தியா திட்டத்தில் நடைபெறும் மும்பை கண்காட்சியில் வேலூர் மாநகராட்சி பங்கேற்பு-

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வரும் 18, 19 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெறும் கண்காட்சியில் வேலூர் மாநகராட்சியின் ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டை தூய்மையாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம், வீடுகளில் கழிவறை அமைத்தல், ஸ்மார்ட் சிட்டி திட்டம் என நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து கண்காட்சி மற்றும் ஆலோசனைக்கூட்டம் மும்பையில் வரும் 18, 19 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது.

இந்த கண்காட்சியில் வேலூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை குறித்த செயல்முறைகளை சமர்ப்பிக்கப்படுகிறது.
திருநெல்வேலி மாநகராட்சியில் வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பது குறித்த செயல்முறைகளையும், கும்பகோணம் நகராட்சியில் குப்பை கிடங்குகளை கையாள்வது குறித்த செயல்முறைகளையும், சென்னை மறைமலை நகர் பேரூராட்சி சார்பில் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பது குறித்த செயல்முறைகளையும் விளக்கும் அரங்கங்களும் கண்காட்சியில் வைக்கப்பட உள்ளது.

இந்த கண்காட்சி மற்றும் ஆலோசனை கூட்டத்திற்கு ஆணையாளர் குமார், பொறியாளர் பாலசுப்பிரமணியன், நகர்நல அலுவலர் மணிவண்ணன், சுகாதார அலுவலர் முருகன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதுகுறித்து வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி திடக்கழிவு மேலாண்மை, குப்பையில் மின்சாரம் தயாரிப்பது போன்ற நடைமுறையில் உள்ள திட்டங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களிலும் நடைமுறைப்படுத்துவதற்காக, அவைப்பற்றி விளக்கும் கண்காட்சி மும்பையில் வரும் 18, 19 தேதிகளில் நடக்க உள்ளது. இதில் வேலூர் மாநகராட்சியும் பங்கேற்று திடக்கழிவு மேலாண்மை குறித்த செயல்முறையை சமர்ப்பிக்கிறது’ என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *