நான்கு ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சியே தொடரும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

நான்கு ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சியே தொடரும்  –  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

நான்கு ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சியே தொடரும் என, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில், வீட்டு வசதி மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுடனான கூட்டம், அத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் கலந்துகொண்டார். கூட்டத்திற்கு பின் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெறும் என, ஓ.பி.எஸ். மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, நான்கு ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சியே தொடரும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *