நான் சந்தித்த சிறந்த மனிதர்களில் ஒருவர் தோனி புகழாரம் சூட்டும் இம்ரான் தாஹிர்

நான் சந்தித்த சிறந்த மனிதர்களில் ஒருவர் தோனி புகழாரம் சூட்டும் இம்ரான் தாஹிர்

தென் ஆப்ரிக்கா அணியின் இம்ரான் தாஹிர் இந்த ஐபிஎல் சீசனில், ஸ்மித் தலைமையிலான புனே அணியில் விளையாடுகிறார். முதல் போட்டியிலேயே மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி கலக்கினார் தாஹிர். அவரது அணியில் தான் முன்னாள் இந்திய கேப்டன் தோனியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தாஹிர், ‘எனக்கு தோனியின் மேல் மிகுந்த மரியாதை உள்ளது. அவர் நாட்டுக்காக நிறைய சாதித்திருக்கிறார். நான் சந்தித்ததிலேயே மிகவும் சிறந்த மனிதர்களில் ஒருவர் தோனி. நான் இந்தியாவில் நன்றாக விளையாடுவதற்கு அவர் மிகவும் உதவிகரமாக இருக்கிறார். அவர் ஒரு சகாப்தம் என்பதை முன்னரே நிரூபித்துள்ளார்.

அவருடன் தொடர்ந்து விளையாடுவது குறித்து மிகவும் ஆர்வமாக உள்ளேன். நெட்டில் பயிற்சி செய்யும் போது அவருடன் நான் நிறைய பேசிவருகிறேன். நெட்டில் கூட அவருக்கு நான் பந்து வீச விரும்பவில்லை. ஏனென்றால், அப்போதும் என் பந்தை சிக்ஸருக்கு அவர் அடித்து தள்ளுகிறார்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *