நுங்கின் மருத்துவகுணங்கள்-

நுங்கின் மருத்துவகுணங்கள்-

*நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும்.
*நுங்கு வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக்கும்.
*பனை நுங்கிற்கு கொழுப்பைக்கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு. பனை நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டுவதோடு மலச் சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டிற்குமே பனைநுங்கு மருந்தாக பயன்படுகிறது.
*உடல் ஊணத்தால் அவதிப்படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. பனை நுங்கை சாப்பிட்டால் அவர்கள் தாகம் அடங்கும்.
*இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும். நுங்கில் காணப்படும் ஆந்த்யு+சைன் எனும் இரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும் சக்தி கொண்டது.
*பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்குரு நீங்கும். இது குடல் புண்ணை ஆற்றும் தன்மை உடையது.

தொகுப்பு
த.தீபக்,
செய்தியாளர்,மனசாட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *