பஸ்கட்டண உயர்வை கண்டித்தும் திரும்ப பெற வலியுறுத்தியும் போலீஸ் தடியடியை கண்டித்தும் ஜனவரி 27 ல் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்

பஸ்கட்டண உயர்வை கண்டித்தும் திரும்ப பெற வலியுறுத்தியும் போலீஸ் தடியடியை கண்டித்தும் ஜனவரி 27 ல் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்

இரா.முத்தரசன் அறிக்கை

தமிழ்நாடு அரசு அதிரடியாக பேரூந்து கட்டணங்களை பன்மடங்கு உயர்த்தி அறிவித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

திடீர் கட்டண உயர்வால் அதிர்ச்சிக்குள்ளான பொதுமக்கள் ஆங்காங்கே மறியல் – ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, காவல் துறையினர் தடியடி நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

கட்டண உயர்வை நியாயப்படுத்தியும், பொதுமக்கள் அனைவரும் கட்டண உயர்வை ஏற்றுக்கொண்டதாகவும் அமைச்சர் பெருமக்கள் கூறுவதும், கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய இயலாது, திரும்ப பெறப்பட மாட்டாது என ஆணவத்துடன், போக்குவரத்துத்துறை அமைச்சர் கூறுவதும் பொறுப்பற்றதாகும்.

பொதுமக்களும், அனைத்து அரசியல் கட்சியினரும், கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, அரசுக்குவிடுத்த வேண்டுகோளை அரசு உதாசினப்படுத்துவது மிக வன்மையாக கண்டிக்கதக்கதாகும்.

அரசு போக்குவரத்துக் கழகம் சேவை நிறுவனம் ஆகும். அதில் ஏற்பட்டுள்ள நிர்வாக சீர்கேடுகளை களைந்து, நேர்மையான நிர்வாகத்தை ஏற்படுத்திட அரசு தவறிவிட்டது மட்டுமின்றி, இனி கட்டணங்களை அதிகாரிகளே அவ்வப்போது தீர்மானிப்பார்கள் என அரசு அறிவித்து இருப்பதை திரும்ப பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

கட்டண உயர்வை கண்டித்தும், திரும்ப பெற வலியுறுத்தியும், காவல்துறையின் தடியடி சம்பவங்களை கண்டித்தும் வரும் 27.01.2018 சனியன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

திமுக மற்றும் தோழமை கட்சி தோழர்களுடன் இணைந்து பொதுமக்களின் பேராதரவுடன் பல்லாயிரக் கணக்கில் மக்கள் பங்கு பெறும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திட வேண்டுமாய், கட்சியின் அனைத்து அமைப்புகளையும், மாநிலக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *