பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச்சேர்ந்த 12 வயது சிறுவன் எல்லையில் கைது செய்யப்பட்டுள்ளான்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச்சேர்ந்த 12 வயது சிறுவன் எல்லையில் கைது செய்யப்பட்டுள்ளான்

ஜம்மு,

எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியை கடந்து காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் சுற்றி திரிந்த 12 வயது சிறுவனை ராணுவத்தினர் பிடித்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச்சேர்ந்தவன் என்பது தெரியவந்தது.

எல்லையில் ஊடுருவுவதற்கான வழிகள் மற்றும் ராணுவ ரோந்து பணிகள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்வதற்காக சிறுவனை பயங்கரவாதிகள் அனுப்பியிருக்கலாம் என்று ராணுவம் சந்தேகிக்கிறது. பிடிபட்ட சிறுவனின் பெயர் அஷ்பாக் அலி சவுகான் என்பதும் பலுசிஸ்தான் ரெஜிமெண்ட் ஓய்வு பெற்ற ராணுவவீரரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது. சிறுவனிடம் மேலும் விசாரணை நடத்த காஷ்மீர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *