பாகுபலி 2 திரை விமர்சனம்

பாகுபலி 2 திரை விமர்சனம்

இந்தியாவின் மிக பிரமாண்டமான திரைப்படமான ‘பாகுபலி 2’ திரைப்படம் இன்னும் சில மணி நேரங்களில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தை பற்றிய திரை விமர்சனம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

பிரிட்டன் மற்றும் அமெரிக்க சென்சார் போர்டு உறுப்பினர் என தன்னை கூறிக்கொள்ளும் உமைர் சந்து என்பவர் பாகுபலி-2 படத்தின் பிரீமியர் காட்சியை பார்த்ததாக கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அத்துடன் பாகுபலி படத்தை பற்றிய தன்னுடைய விமர்சனத்தையும் இணைத்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, திரைப்படம் தயாரிப்பது சுலபமான ஒன்று அல்ல. இந்தியாவில் மிகப்பிரம்மாண்டமாக படம் தயாரிக்க மிகப்பெரிய அளவில் பணம் செலவாகும் என்பதால் அது சவாலான ஒன்றாகும்.

சிஜிஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கும் பாகுபலி 2 திரைப்படம் ஹாலிவுட் சிறந்த படமான லார்ட் ஆஃப் த ரிங்ஸ் சீரிஸ் மற்றும் ஹாரி பாட்டர் படங்களின் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு நிகராக உள்ளது. கிராஃபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட காட்சிகள் அப்படியே தத்ரூபமாக உண்மைத்தன்மையாக உள்ளன.

சிஜிஐ பயன்படுத்தும் மற்ற இந்திய திரைப்படங்களை ஓப்பிடும்போது பாகுபலி 2 திரைப்படத்தின் மஹிஷ்மதி நகரின் கண்கவர் காட்சிகள், மெய்சிலிர்க வைக்கும் நீர் வீழ்ச்சி போன்றவை சிறப்பாக உள்ளது.

இந்த படத்தில் நடித்துள்ள கதாப்பாத்திரங்கள் ஒவ்வொருவரும் தங்கள் நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். ஆனால் அதில் பிரபாஸ் மற்றும் ராணா ஆகியோரின் நடிப்பு கூடுதல் சிறப்பு. குறிப்பாக ராணாவின் கதாப்பாத்திரம் சிறப்பாக உள்ளது. எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும் கண்களுடன் ராணா பின்னியிருக்கிறார்.

துணை கதாப்பாத்திரமாக நடித்திருக்கும் ரம்யா கிருஷ்ணன் ஏற்படுத்தும் தாக்கத்தில் இருந்து வெளிவர முயற்சிக்க வேண்டும். அந்த அளவுக்கு நடித்திருக்கிறார். மற்ற இரண்டு துணை கதாப்பாத்திரமாக நடித்திருப்பவர்கள் நாசர் மற்றும் சத்யராஜ். இவர்களது நடிப்பும் சிறப்பாக ஈர்த்துள்ளது. ராஜமௌலியின் திரைக்கதையை எந்த இந்திய இயக்குநர்களாலும் நெருங்க முடியாது.

பாகுபலி-2 திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் அற்புதமாக உள்ளது. அவை ஹாலிவுட்டின் சிறந்த படங்களுடன் ஒப்பிடும் வகையில் உள்ளது. பாகுபலி 2-இன் பெரிய செட், VFX, ஒலி, எடிட்டிங், ஒளிப்பதிவு மற்றும் மிக முக்கியமாக திரைக்கதை மிக அருமையாக உள்ளது. கதை, திரைக்கதை, வசனம், இசை மனதை மயக்கும் வகையில் உள்ளது.

பிரபாஸ் தனது நடிப்பில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். ராணா ரகுபதி, அனுஷ்கா, தமன்னா சிறப்பாக நடித்துள்ளனர். சத்யராஜ் தனியாக தெரிகிற அளவுக்கு பின்னியிருக்கிறார்.

மொத்தத்தில், பாகுபலி 2 இந்திய இயக்குநர்களால் மிகப்பெரிய பிரம்மாண்டமான கனவு திரைப்படங்களை உருவாக்க முடியும் என்ற பெருமையை தந்திருக்கிறது. பாகுபலி 2 இன்று தவிர்க்க முடியாத ஒரு படமாக இருக்கும் ஆனால் நாளை அது கிளாசிக் பட வரிசைகளில் இருக்கும் என கூறியுள்ளார்.

பாகுபலி திரைப்படத்துக்கு உமைர் சந்து அளித்துள்ள ரேட்டிங் 5/5. மீண்டும் நாளை பாகுபலி திரைப்படத்தை பற்றிய முழு கதை அலசலோடு நமது ரேட்டிங்கை வழங்குவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *