புறகனிப்பின் வலி

புறகனிப்பின் வலி

அறிவியல் கனவில்… அகால மரணம்…
சமுத்தை நிர்வகிக்கும் நிர்வாக மட்டுமல்ல..
நானும்… என் ஆன்மாவும்தான்…
போலி வார்தைகளால்
மன்னிப்பு கேட்கப்போவதில்லை…
நானும் கொலைகாரண்தான்…

போராட்காரனின்…
உண்மையாளனின்…
நேர்மை எனும் நெஞ்சுறுதியின்…
சாதிய சமுகத்தின் இறுமாப்புபின்
விடை அவன் இழப்பு…

சக போராட்டகாரர்கள் கூட
”ஏன் உனக்கு இது”
”எல்லோரிடமும் இணைங்கி போகலாமே”
”உன் குடும்பத்தாரின் கவை சிதைக்காதே”
”உன் நன்பர்கள் எல்லாம் ஏமாற்று பேர்வழிகள் நம்பாதே”
”உன்னுடைய இவ்வளவு நாள் உழைப்பு கனவு வீண்”
”… … … …”
”… … … …”
”… … … …”
எவ்வளவோ கையால் ஆகாத மனிதர்களின்
வாய் சவுடால்கள் காற்றில் இரத்தமும் சாட்சியாய்…
அறிவியலை, உண்மையை, போர்குணத்தை…
இப்படியாக எல்லாத்தை புறக்கனிப்பின் வலியாய்
என்னை இழந்து ஏகத்துவத்திற்குள்
நான் பிரவேசிக்க வேண்டியதாயிற்றே..

இந்திய மதத்தால் வடிவமடைந்த
சாதிய உளவியல் பண்பாட்டிமிது
உனது அறிவியல் தற்கொலை…
பழைய பண்பாட்டு துாக்கிகளின்
மானசாட்சிகளின் கொலை
நானும் சாட்சியாய் இருந்து சாகக்கிடக்கிறேன்

எழுத்துகள் தவிர என்னால் என்ன செய்துவிட முடிந்தது..?

கேட்கிறது உன் ஆன்மாவின் குரல்
ஞாயத்தின் ஒலியாய்…

உண்மையைய் உரக்க சொல்லும் ஒருவனை
புறக்கனித்து உங்கள் களவனித்தனத்தின் மீது
காரி துப்ப மட்டும்தான் என்னால் உழிழலாம்…

பாலச்சந்திரன்,
புதுக்கோட்டை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *