பொறாமைக்குணம் மிகவும் ஆபத்தானது .

பொறாமைக்குணம் மிகவும் ஆபத்தானது .

கடலில் இரண்டு மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர் .ஒருவர் பெயர் ஜான் ,மற்றொருவர் பெயர் பாலு.ஜான் பேராசை கொண்டவன் .பாலு பொறாமைக்குணம் கொண்டவன் .இரவு நெருங்கியது ,இரண்டு பேரும் மீனை பிடித்து கொண்டு வீடு திரும்பினார்கள் .மறுநாள் சூரியன் உதிக்க தொடங்கியது வானம் தெளிவாக இருந்தது. அவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர் .ஜான் அனைத்து மீன்களையும்
பிடித்துவிடவேண்டும் என்று எண்ணிக்கொண்டு மீன் பிடிக்க சென்றான் .ஆனால்
பாலுவோ அவன் ஒரு மீனையும் பிடிக்கக்கூடாது என்று எண்ணி கொண்டு மீன் பிடிக்க சென்றான் . இருவரும் வெகுதூரம் சென்றனர் .கடலில் மீன்கள் அதிகம் தெரிய தொடங்கியது .இருவரும் படகை நிறுத்தி வலையை வீசினார்கள் .ஜான் வலையில் அதிகம் மீன்கள் சிக்கியது அதை பார்த்த பாலு மிகவும் பொறாமையடைந்தான் .பாலு
தன் கத்தியை எடுத்துக்கொண்டு அவன் வலையை அறுத்துவிட்டான்.தன் வலை அறுந்து போனதை பார்த்தவுடன் பாலு வேறு வலைகளை எடுக்க சென்றான் படகில் வேறு வலைகள் இல்லாததால் வலையை எடுக்க வீட்டுக்கு சென்றான் .பாலு அவன் வருவதற்குள் அனைத்து மீன்களையும் பிடித்து விடவேண்டும் என்று எண்ணினான் .அங்கு அதிக மீன் கூடங்கள் இருந்ததால் அதை வேட்டையாட பெரிய மீன்களான சுறா அங்கு வந்தது .சுறாமீன் அவன்
வீசிய வலையில் மாட்டிக்கொண்டது .அதை பாலு சுறாமீன் என்று தெரியாமல் இழுத்து கொண்டிருந்தான் .சுறாமீன் கோபமாக மாறியது.
அவனை படகுடன் சேர்த்து கடலுக்குள் தள்ளியது .பிறகு சில நிமிடங்கள் கழித்து சுறாமீன் அங்கிருந்து சென்றது .பாலுவின் படகுகள் வலைகள் என பாடகில் இருந்த அனைத்து கடலில் மூழ்கியது .அவன் மட்டும் படகில் இருந்த ஒரு மரக்கட்டையை பிடித்து கொண்டு கரையை அடைந்தான் .அப்போது
அவன் உணர்துகொண்டான் தன்னுடைய பொறாமை குணத்தால்தான்
இப்படி நடந்தது என்று .பிறகு ஜானிடம் சென்று உண்மையை சொல்லி
மின்னிப்புகேட்டான் பாலு .பிறகு இருவரும் ஒற்றுமையாக மீன் பிடிக்க
சென்றார்கள்.

உண்மைக்கருத்து:
பேராசையை விட பொறாமைக்குணம் மிகவும் ஆபத்தானது .

த.தீபக்
செய்தியாளர் ,மனசாட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *