போராட்டம் அன்றும்…இன்றும்…

போராட்டம் அன்றும்...இன்றும்...

1937 – 38 காலகட்டத்தில் மொழி போராட்டமானது 1965 ல் புரட்சியாக வெடித்தது “இந்தி எதிர்ப்பு போராட்டம்” 1965 காலகட்டத்தில் நடந்த அந்த போராட்டத்தில் ஆண்,பெண்,சாதி,மதம்,இவைகளை கடந்து போராட்டம் தமிழகத்தில் உச்சகட்டமாக நடைபெற்றது.இந்தி மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக மாற்றுவதை எதிர்த்து இந்த போராட்டம் இருந்தது.அன்றும் அவர்கள் மத்திய அரசை எதிர்த்துதான் போராடினார்கள்.பலர் போராட்டத்திற்காகவே தங்கள் உயிரையே மாய்த்து கொண்டார்கள்.அன்று இந்தியாவே அஞ்சியது தமிழகத்தின் ஒற்றுமையை கண்டு. மத்திய அரசு எவ்வளவோ அடக்குமுறைகளை கையாண்டது ஆனால்அதன் கனவு இறுதியில் நிறைவேறவில்லை. தமிழ் அறிஞர்களால் தொடங்கிய போராட்டம் மாணவர்களிடமும், இளைஞர்களிடமும்,பொதுமக்களிடமும் சென்று திராவிட இயக்கங்களாக முழுமை பெற்றது.அன்று போராடியவர்கள் திராவிட தலைவர்களாக அங்கீரிக்கப்பட்டார்கள்.

இன்று சில சிறு,சிறு அமைப்புகள் கடந்த சில வருடங்களாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து போராடி வந்தது.அவர்களே இந்த மெரினா புரட்சிக்கு விதை என்றே சொல்லலாம்,ஜல்லிக்கட்டின் முக்கியத்துவத்தை அறிய தொடங்கிய இளைஞர்களின் கூட்டமும்,மாணவர்களின் கூட்டமும் இந்த அரசு சிறிதும் எதிர்பார்க்காத நிலையில் பெருந்திரளாக ஒன்றிணைந்தார்கள்.ஒரு சில நாட்களிலே மாநிலம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்தது.சாதி,மதம் வேறுபாடுகளை கடந்து போராட்டம் தீவிரம் அடைந்தது,1965 க்கு பிறகு 2017 ல் தான் ஒட்டுமொத்த தமிழர்களையும் ஒன்றிணைத்தது இந்த போராட்டம்,சாதியால் தமிழகத்தை பிரித்து விடலாம் என்று எண்ணிய பல சாதி கட்சிகளுக்கு மரணயடியாக இருந்தது “மெரினா புரட்சி” தமிழ் மக்களை இனி யாராலும் ஒன்று சேர்க்க முடியாது என்று எண்ணியிருந்த தேசிய கட்சிகளுக்கும்,மாநில கட்சிகளுக்கும் பேரிடியாகத்தான் இருந்திருக்கும். தமிழகம் முழுவதும் மாணவர்கள்,இளைஞர்கள்,அவர்களுக்கு ஆதரவாக இருந்த பொது மக்கள் ஆகியோரின் குரல் “ஜல்லிக்கட்டு வேண்டும்” என்கிற குரலாகவே இருந்தது.

அன்றும் சரி, இன்றும் சரி போராட்டம் மதிய அரசை எதிர்பதாகவே
இருந்தது.1965 மொழி போராட்டத்தின் போது தமிழ் அறிஞர்களும்,திராவிட இயக்கங்களும் முன்னிலை வகித்தன. இன்று ஜல்லிக்கட்டு போராட்டத்திற்காக மாணவர்கள்,இளைஞர்கள் மட்டுமே முன்னிலை வகித்தனர் என்று தான் சொல்லவேண்டும்.மொழி போராட்டமாக இருந்தாலும்,ஜல்லிக்கட்டு போரட்டமாக இருந்தாலும் சரி அது மத்திய
அரசின் இயலாமையை எதிர்த்தும்,அவர்களின் அடக்குமுறைக்கு எதிராகவே அமைந்து இருந்தது தமிழர்களின் இவ்விரு போராட்டங்களும்.அன்று வென்றது தமிழ் அறிஞர்கள்,ஆனால் என்று வென்றது மாணவர்களும், இளைஞர்களும்.இந்த இரண்டு போராட்டங்களிலும் வென்றது தமிழர்களே என்பதில் பெருமிதம் கொள்ளலாம். இன்று உலகமே அஞ்சியது தமிழர்களின் ஒற்றுமையைக்கண்டு…

தோழர்,
ஆசிரியர் மனசாட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *