மணல் விலை உயர்வு கட்டுமான பணிகள் முடக்கம்

மணல் விலை உயர்வு கட்டுமான பணிகள் முடக்கம்

கடந்த ஒரே மாதத்தில், சென்னையில் மணல் விலை, 2 மடங்கு உயர்ந்துள்ளதால், அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகள் முழுவதுமாக முடங்கியுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம் பாலாறு, விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆறு, காவிரி ஆறு ஆகியவற்றில் மணல் எடுக்கப்பட்டு வந்தது.

அறிவிப்பு
இதில், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து எடுக்கப்படும் மணல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கட்டுமானப் பணிகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வந்தது. தற்போது காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் மணல் குவாரி நிறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், திருச்சி, கரூர் ஆகிய பகுதிகளில் மட்டுமே மணல் எடுக்கப்படுகிறது.
காவிரி ஆற்று மணல், பூச்சு வேலைக்கு மட்டுமே, பயன்படுத்த ஏதுவாக இருக்கும் என்றும், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் எடுக்கப்படும் மணல், கட்டுமான வேலைக்கு பயன்படுத்த ஏதுவாக இருக்கும் என்றும், கட்டுமான பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மாவட்டங்களில்,மீண்டும் மணல் எடுக்க அனுமதி கிடைக்கும் வரை, கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைத்துள்ளதாகவும் கட்டுமான நிறுவனங்கள், அரசு கட்டட ஒப்பந்ததாரர்கள் தெரிவித்துள்ளனர்.

அவகாசம்
இதற்கிடையே, சென்னை மாநகராட்சியில் நடந்து வந்த கட்டுமானப் பணிகளை, ஒப்பந்ததாரர்கள் கடந்த ஒரு வாரமாக நிறுத்தியுள்ளனர். மணல் விலை உயர்வு காரணமாக, பணிகளை நிறுத்தி வைத்து உள்ளதாக ஒப்பந்ததாரர்கள் தெரிவித்துள்ளனர். மணல் விலை, 2மடங்காக உயர்ந்துள்ளதால், அதிகாரிகளும் ஒப்பந்ததாரர்களுக்கு அவகாசம் அளித்துள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *