மருந்தாய் மதுக்கோப்பைகள்

மருந்தாய் மதுக்கோப்பைகள்

நாட்காடியில் எந்த குறிப்புகளற்றும்
சலசலத்துகொண்டிருக்கிறது
அங்கும் இங்கும் நகராத எண்கள்
என் காலமெனும் மதுக்கலவையில்
போதையை மெருகேற்றுகிறது…

உடல் இயக்கத்தின் கலவரமாய்
புத்தியின் தள்ளாட்டமாய் போதை…

போதைபுத்தி
அடுக்கனை குடியிறுப்பு காய்யும் துணிபோல்
பதறி பதறி காற்றில் காய்கிறது,
போதை என்ற கிளிப்பு இல்லை என்றால்?
அறிவு வளர வளர சேருக்காய் முதிர்ந்து
உணர்வறுத்து ஒட்டமலே மண்டை கனத்து திரிகிறேன்

நாட்காட்டியும், கடிகாரமுள்ளும்தான்
சீராக என்னையும் என் தற்குறி அறிவையும்
செரித்து செரித்து கழிவாய் சேகரித்து
இன்று துருநாற்ற கழிவாய் சேகரிக்கிறது.

பேராசை இலக்குகளுக்காய் கவனம் காத்திருக்கையில்
ஆற்றமுடியாத பெருமூச்சுக்கு மருந்தாய் மதுகோப்பைகள்

பாலச்சந்திரன்,
புதுக்கோட்டை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *