முத்தலாக் விவகாரத்தை வைத்து பிரதமர் மோடி அரசியல் செய்வதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

முத்தலாக் விவகாரத்தை வைத்து பிரதமர் மோடியும், பாஜக தலைவர்களும் அரசியல் செய்வதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆஷாத் கூறும் போது, முத்தாலக் முறையை எந்தவொரு முஸ்லிம்களும் தவறாக பயன் படுத்துவதாக தான் கருதவில்லை என தெரிவித்துள்ளார்.

கன்னட அறிஞர் பசவேஸ்வராவின் பிறந்தநாளை ஒட்டி டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இஸ்லாமிய சமூதாயத்தை சேர்ந்த அறிஞர்கள் முன்வருவார்கள் என நம்புவதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரத்தை அரசியலாக்க கூடாது என வலியுறுத்திய பிரதமர், முத்தலாக் முறையை எதிர்த்து உங்கள் மகள்கள் போராடினால் ஆதரியுங்கள் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *