மூட்டு வலியை சரிசெய்ய இதோ இருக்கு பூண்டு!

மூட்டு வலியை சரிசெய்ய இதோ இருக்கு பூண்டு!

*நாம் முறையான உடற்பயிற்சி செய்தால் கொழுப்புச்சத்து தானாக குறைந்துவிடும். உடற்பயிற்சி இல்லாவிட்டால், உடம்பு அதிகரிக்கும். உடல் எடை அதிகரிப்பில் வரக்கூடிய ஒரு சிறிய வலி தான் மூட்டு வலி.

*இந்த மூட்டு வலி சிலருக்கு மாதம், ஏன் சிலருக்கு வருட கணக்கில் கூட இருக்கும். இந்த மூட்டுவலியை குறைவான செலவிலே குணப்படுத்து முடியும். அதிலும், வீட்டிலிருந்தபடியே குணப்படுத்தி விடலாம் என்பது தான் ஆச்சரியமான ஒன்று.

*வீட்டில் இருக்கும் வெள்ளை பூண்டு 2 பல் எடுத்துக் கொள்ளுங்கள். அதை கத்தியால் சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். அதை அரைக்கவோ நசுக்கவோ கூடாது. இரவு தூங்கப்போகும் போது, அப்படியே வாயில் போட்டு முழுங்கி, தண்ணீர் குடிக்க வேண்டியதுதான்.

*பூண்டு ரத்தத்தின் அடர்த்தியை கொஞ்சம் குறைப்பதால் இதயம் பம்ப் செய்ய அதிக மெனக்கெடுவதில்லை. சாதாரணமாகவே, பம்ப் செய்வதால் ரத்தம் உடல் முழுக்க சீராக பாய்வதால் மூட்டுக்களில் தேங்கி இருக்கும் கொழுப்பு தானாக கரைத்து அந்த இடத்திலிருந்து நகர்ந்து விடுகிறது. இதன்மூலம், மூட்டுவலிகள் காணாமல் போகின்றது.

*ஒரு நாளைக்கு 1-2 பல் பூண்டு சாப்பிடுவது நல்லது. பச்சையாக பூண்டு சாப்பிடுவது சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். அதுவும் உடலில் கொப்புளங்கள் வருவது, உடலின் வெப்பநிலை அதிகரிப்பது, தலை வலி ஏற்படுவது போன்றவை இருந்தால், உடனே பூண்டை பச்சையாக சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.

தொகுப்பு
த.தீபக்,
செய்தியாளர்,மனசாட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *