ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர குண்டு வெடிப்பில் 10 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. பலர் படுகாயம் அடைந்துள்ளனராம். இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் குண்டு வெடிப்பு நடந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் மூன்று மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
ரஷ்யா மெட்ரோ ரயில் நிலையங்களில் பயங்கர குண்டு வெடிப்பு – 10 பேர் பலி
