விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு

பேருந்துக் கட்டண உயர்வு, சென்னையிலும் மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் !!

ஏழை எளிய நடுத்தர மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கும் விதத்தில் பேருந்துக் கட்டணத்தை அதிமுக அரசு உயர்த்தியுள்ளது. ஏறத்தாழ இரண்டு மடங்காகக் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. பெட்ரோல் டீசலுக்குக் கூடுதல் வரிவிதித்து அதன் விலை உயர்வுக்குக் காரணமாக இருக்கும் மாநில அரசு டீசல் விலை உயர்ந்துவிட்டது எனச் சொல்லி பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவது ஏற்புடையதல்ல. ஒரு சில பேருந்துகளை வைத்திருக்கும் தனியார் கூட லாபம் ஈட்டும் போது அரசு பேருந்துக் கழகங்கள் நட்டமடைந்துவிட்டன எனக் கூறுவது அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகிறது. நிர்வாகத்தில் முறைகேடுகள் இருப்பதை ஏற்கனவே கணக்குத் தணிக்கை ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. அதை சரி செய்வதற்கு பதிலாக பேருந்துக் கட்டணத்தை உயர்த்துகிறோம் எனக் கூறுவது எந்தவிதத்தில் நியாயம் ?

அரசாங்கத்துக்கு வருமானம் போதவில்லை என்று மாநில அரசு சொல்வதையும் நாம் ஏற்க முடியாது. மத்திய அரசின் வரிவருவாயில் மாநிலத்துக்குரிய பங்கை உயர்த்திப் பெற முயற்சிக்காமல் அந்தச் சுமையையெல்லாம் மக்கள் மீது சுமத்துவது ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகிறது.

பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியுள்ள தமிழக அரசின் மக்கள் விரோத நடவடிக்கையைக் கண்டித்தும் கட்டண உயர்வை முழுமையாகத் திரும்பப்பெறக் கோரியும். எதிர்வரும் 23.01.2018 செவ்வாய்கிழமை காலை எனது தலைமையில் சென்னையிலும் மறுநாள் 24ஆம் தேதி காலை மாவட்டத் தலைநகரங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *