2016 தமிழ் சினிமா – ஒரு பார்வை

2௦16 ல் வெளியான 223 படங்களில் (டப்பிங் படங்களும் சேர்த்து) கவனம் பெற்ற படங்கள் வெளிவந்த நாட்கள் அடிப்படையில் ஓர் சிறு பார்வை.
ரஜினிமுருகன்
2016ன் முதல் வெற்றியை பதிவுசெய்த படம். தாமதமாக வந்தாலும் சிவகர்த்திகேயனுக்கு பெரிய வெற்றி கொடுத்த படம். இமான் இசையும் வெற்றிக்கு முக்கிய கரணம்.
தாரை தப்பட்டை
படம் எதிர்பார்த்த வெற்றி பெற வில்லை ராஜாவின் 1௦௦௦மாவது படம் பின்னணி இசை பிரமாதம்.
இறுதிச்சுற்று
விமர்சகர்களும் சாதரண மக்களும் கொண்டாடிய படம். மாதவன் boxing coach ஆக மாறி இருந்தார் என்றே சொல்லலாம்.
விசாரணை
இந்தாண்டு ஆஸ்கார் வரை சென்ற தமிழ் படம்..உண்மையாக தரமான படம். இதுவரை பார்க்காதவர்கள் கண்டிப்பா பாருங்க.
மிருதன்
தமிழில் ஓர் புதிய முயற்சி பாடல்கள் அருமை படமும் நன்றாகவே இருந்தது.
சேதுபதி
விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரி வேடம் நல்ல collection தியேட்டர்களில் வருடத்தின் முதல் படமே விஜய் சேதுபதிக்கு ஹிட்.
பிச்சைக்காரன்
தியேட்டர் ஓனர்கள் கொண்டாடிய படம் சிறிய பட்ஜெட் பெரிய வெற்றி.
காதலும் கடந்து போகும்
சூது கவ்வும் வெற்றிக்கு பிறகு நலன் இயக்கிய படம். வேறு சாதாரண கதைக்களம் எளிமையான making. ஒருமுறை பார்க்கலாம் ரகம்.
தோழா
நாகார்ஜுனா கார்த்தி இணைந்து ஒரு நல்ல படம். குறிப்பாக location அருமை.
தெறி
விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைவருக்கும் பிடித்த படம். மாஸ் ஹிட் படம். செம வசூல்

24
மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த படம். எதிர்பார்த்த வெற்றியை பெற வில்லை ரஹ்மான் பாடல்களும் சுமார் ரகமே
உறியடி
படம் வந்த போது தியேட்டர்களில் பார்த்தவர்களை விட டவுன்லோட் செய்து பார்த்தவர்களே அதிகம். அதிகம் பாராட்டு வாங்கிய சிறிய பட்ஜெட் படம். இந்த படத்தையும் கண்டிப்பா பார்த்துருங்க.
இறைவி
கார்த்திக் சுப்புராஜ் படம். படம் மொக்கை படம் சூப்பர் என 2 விதமான விமர்சனம் வந்த படம்.
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்
ரோபோ சங்கர் comedy படத்தை காப்பாற்றியது. ஒரு முறை பார்த்து சிரிக்கலாம்.
மெட்ரோ
பலரும் பாராட்டிய மற்றொரு சிறிய பட்ஜெட் படம்.நடித்த அனைவரும் சிறப்பாக நடித்திருந்தனர்.
அப்பா
ஆங்கில பள்ளிகள் மோகத்தை சாட்டையடி கொடுத்த படம். சற்று பிரச்சார நெடி இருந்தாலும் வெற்றி படமே.
தில்லுக்கு துட்டு
2 படம் ஹீரோவாக நடித்து பிளாப் ஆன நேரத்தில் சந்தனத்திற்கு தேவையான வெற்றியை தந்த படம்.
கபாலி
ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்த்த படம். வரலாறு காணாத விளம்பரம். முதலில் விமர்சனம் எதிராக வந்தாலும் ரஜினி என்ற ஒற்றை சொல் அனைத்தையும் சரி கட்டி விட்டது. இந்தாண்டின் மிக பெரிய வியாபாரம் கபாலி.

ஜோக்கர்
வியாபார ரீதியில் சாதிக்க வில்லை என்றாலும் நல்ல படம் அரசியலை தைரியமாக பகடி செய்த படம். பார்கதவர்கள் கண்டிப்பா இந்த படத்தை பார்த்துருங்க
தர்மதுரை
விஜய் சேதுபதிக்கு மற்றொரு வெற்றி படம். கிராமத்து சூழல் அருமை. மக்கா கலந்குதப்ப்பா பாடல் செம ஹிட்.
இருமுகன்
விக்ரமிற்கு ஓரளவிற்கு நல்ல பெயர் கிடைத்தது இந்த படம் வந்த போது வேறு படங்கள் இல்லை அதனால் சற்று ஓடியது.
ரெமோ
சிவகர்த்திகேயன் அடுத்த வெற்றி படம் பல மாற்று கருத்து சொன்னாலும் படம் ஹிட். ஆனால் இவ்வளவு பெரிய பட்ஜெட் சிறந்த PC ஸ்ரீராம் போன்றவர்களை வைத்து இன்னும் சிறப்பாக கொடுத்து இருக்கலாம்.
கொடி
தனுஷ் வெற்றியை பதிவு செய்த படம் ஒருமுறை பார்க்கலாம் திரிஷா நடிப்பு அருமை.

அச்சம் என்பது மடமையடா
GVM சிம்பு மற்றொரு அழகான படம் பாடல்கள் அனைத்தும் செம ஹிட். 2 ம் பாதி இன்னும் சிறப்பாய் இருந்து இருக்கலாம்.

இப்படிக்கு
ஆந்தை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *