2,804 தமிழக அரசில் செவிலியர் பணியிடங்கள்.

2,804 தமிழக அரசில் செவிலியர் பணியிடங்கள்.

தமிழ்நாடு மருத்துவச் சேவை பணியாளர் ஆணையம்(TNMRB) 2012 ல் துவங்கப்பட்டது. மருத்துவச் சேவை தொடர்பான பல்வேறு பணியாளர்களையும்
இந்த ஆணையமே தேர்வு செய்து தருகிறது. தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள கிராமப்புற செவிலியர் (VILLAGE NURSE ) மற்றும் ஏ.என்.எம்., எனப்படும் செவிலியருக்கான பேறுகால உதவியாளர் ஆகிய 2 நிலைகளில் 2,804 காலியிடங்களை இந்த ஆணையம் தற்போது அறிவித்துள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் இது ஒரு மிகப் பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு எனக் கூறலாம். தமிழ்நாட்டில் மட்டுமே இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் நியமிக்கப்படுவர்.
தகுதிகள்: கல்வி: ஏ.என்.எம்., தகுதி பெற்றிருக்க வேண்டும். அல்லது 10 ம் வகுப்புக்குப் பின் 18 மாத கால ஏ.என்.எம்./மிட்வைப்/மல்டி பர்பஸ் ஹெல்த் ஒர்க்கர்ஸ் பயிற்சியை முடித்திருக்க வேண்டும்.
வயது: ஜூலை 1 , 2017 அன்று 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி? டி.என்.எம்.ஆர்.பி., இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஒரு தனி இணைப்பை உருவாக்கி உள்ளது. www.mrb.tn.gov.in என்னும்
அந்த தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். பின் Health Nurse / ANM Notification என்னும் இணைப்பிற்கு சென்று அப்ளை ஆன்லைன் இணைப்பிற்கு செல்ல வேண்டும். விண்ணப்பத்தை ஆன்லைனில் நிரப்ப வேண்டும். பின் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இப்படி நிரப்பப்படும் ஆன்லைன் விண்ணப்பத்தை ஒரு பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினரும் ஓ.பி.சி., பிரிவினரும் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ.250 செலுத்தினால் போதும்.
பிற குறிப்புகள்: ஆன்லைனில் விண்ணப்பிக்க செல்ல வேண்டிய இணையதள இணைப்பு முகவரி: https://mrb.online-ap1.com/MRB5/
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் பிப்ரவரி 24 , 2017. ஆன்லைனில் கட்டணம் செலுத்தக் கடைசி நாள் பிப்ரவரி 28, 2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *