8500 மத்திய அரசு உதவியாளர் காலியிடங்கள்

8500 மத்திய அரசு உதவியாளர் காலியிடங்கள்

மத்திய அரசின் பலவேறு துறைகளில் காலியாக உள்ள எம்.டி.எஸ்., எனும் உதவியாளர் பணியிடங்களுக்கான எஸ்.எஸ்.சி., தேர்வு அறிவிப்பை கடந்த வாரம் ‘வேலை வாயப்பு மலரில்’ வெளியிடப்பட்டிருந்தது. தற்போது இதற்கான விரிவான விபரங்களை பார்க்கலாம். சுமார் 8500 பணியிடங்கள் இத்தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. தமிழகத்துக்கு 453 காலியிட்ஙகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

எப்படி விண்ணப்பிப்பது: முதலில் www.ssconline.nic.in என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும். அதில் Multi Tasking(Non – Technical) Staff in different States/UTs, 2016 என்பதன் கீழ் உள்ள அப்ளை பட்டனை ‘கிளிக்’ செய்யவும்.

இதுவரை எஸ்.எஸ்.சி. தேர்வை எழுதாதவர் என்றால் ONE TIME REGISTRATION என்னும் பெயர் பதிவை செய்து கொள்ள வேண்டும். பின்பு SUBMIT பட்டனை அழுத்தவும். close பட்டனை அழுத்தினால் நீங்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்த அனைத்துத் தகவல்களும் அழிந்து விடும்.

சரியாக பதிவு செய்தால் உங்களுக்கான USERID மற்றும் PASSWORD ஆகியவற்றை பெறலாம். இதன் பின் உங்களது போட்டோ மற்றும் கையெழுத்தை பதிவு செய்ய வேண்டும். இதை பின்பு ஒரு நாளில் (கடைசி தேதிக்கு முன்பாக) கூட ஏற்றுக் கொள்ளலாம்.

உங்களது புகைப்படம் ஸ்கேன் செய்யும் பொது, அதன் அளவு 4 KB முதல் 12 KB வரை இருக்க வேண்டும். 100×120 என்னும் பிக்சல் அளவை கொண்டிருப்பதும் முக்கியம். இது போலவே கையெழுத்தானது 1 KB முதல் 12 KB அளவை கொண்டிருக்க வேண்டும். 40×60 பிக்சல் அளவாகவும் இருக்க வேண்டும். இது வரை பதிவு செய்த தகவல்களில் எதுவும் தவறு இருந்தால் VIEW /EDIT லிங்கில் அதை சரி செய்து கொள்ளலாம்.

விண்ணப்பக்கட்டணம்: கட்டணத்தை ஆன்லைன் அல்லது ஆப் லைனிலும் செலுத்தலாம். ஆன்லைனில் செலுத்த நெட் பாங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாக செலுத்தலாம். ஆப் லைனில் செலுத்த சலானை டவுன்லோடு செய்து செலுத்த வேண்டும். இதை ஸ்டேட் வங்கியில் செலுத்த வேண்டும். முழு விபரங்களையும் எஸ்.எஸ்.சி., இணையத்தளத்தில் பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 2017 ஜன., 31.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *